புதன், 24 ஆகஸ்ட், 2011

காந்தி நாளில் மட்டுமே வருகிறாயே! காந்தி


அடிமைத்தளையில் உன்னால் மட்டும்
எப்படிக் கிளை விடமுடிந்தது?
நிறப்பேதப் பாறையின் இடுக்கில் சிக்கியும்
எப்படி அமைதியாய் உன்னால் சிரிக்க முடிந்தது?
நிறத்தை மாற்றிக் கொள்ளாத
ஒற்றைச் செடியாய்த் தனியே மண்ணில்
எப்படி உன்னால் மணக்க முடிந்தது?
அன்னியர் வெப்பம் ஊடுருவியும் கூட
எப்படி உன்னால் தழைக்க முடிந்தது?
விடியலுக்கான வெளிச்சத்தில் வேரையும்
இலையையும் இழந்த பின்னும்
எப்படி இரத்தம் கசிய உன்னால் முடிந்தது?
ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்துகொள்!
நெடுவெளியில் நீ கற்பூரச் செடியாய்
மணந்தபோதுதான்
எங்கள் தேசத்தின் மூச்சுக்குழாய்க்கு
உயிர்ப்பே வந்தது.
உன்வாசத்தை நுகர்ந்தபோதுதான்
எங்கள் சுதேசி ரத்தம் சுத்தமாயிற்று.
மண்ணில் நீ மரித்தபோதுதான்
ஓர் இந்தியன் இறக்கிறான்
என்ற உணர்வே வந்தது.
மறுபடி மண்ணில் நீ
எப்போது மலர்கின்றாயோ
அப்போதுமட்டுமே
எங்கள் ஆன்மா புனிதமாகும்.
அதுவரை நீ நினைக்கமட்டுமே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக